உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாண்டுரங்க சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

பாண்டுரங்க சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த குண்டலப்புலியூர் தாயார் ருக்மணி தேவி சத்தியபாமா சமேத பாண்டுரங்க சுவாமி கோவிலில், இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. அதனையொட்டி, கடந்த 23ம் தேதி காலை 5:00 மணிக்கு அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி, கலாகர்ஷணம் ஹோமம் நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு வேத பிரபந்த சாற்று முறை நடக்கிறது. நேற்று காலை 7:00 மணிக்கு மஹா சாந்தி ஹோமமும், மாலை 4:00 மணிக்கு திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 8:30 மணிக்கு கிருஷ்ணகான இசை பக்தி பாடல் நிகழ்ச்சி நடக்கிறது. கும்பாபிஷேக தினமான இன்று (25ம் தேதி) காலை 6:30 மணிக்கு யாத்ரா தானம் புறப்படாகி 9:30 மணிக்கு விமானம் கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !