உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தானில் தசாவதாரம்

சோழவந்தானில் தசாவதாரம்

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயணப்பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நேற்று முன் தினம் இரவு விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவில் ஏப்., 22 ல் ஜெனக நாராயணப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளினார். நேற்று முன் தினம் இரவு அக்ரஹாரம் சந்தானகோபாலகிருஷ்ணன் கோயில் அரங்கில் அழகரின் தசாவதார நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் ஒவ்வொரு அவதாரங்களையும் தரிசித்தனர். ஏற்பாடுகளை யாதவர் சங்க நிர்வாகிகள், கோயில் நிர்வாக அதிகாரி லதா, தலைமை கணக்கர் பூபதி மற்றும் பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !