உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டி.கொளத்துார் கோவிலில் ராமநவமி மகோற்சவ விழா!

டி.கொளத்துார் கோவிலில் ராமநவமி மகோற்சவ விழா!

உளுந்துார்பேட்டை: டி.கொளத்துார் கிராமத்தில் மீனாட்சி சமேத தடாகபுரீஸ்வரர் நாராயண சுவாமி கோவிலில் ராமநவமி மகோற்சவ விழா நடந்தது.  உளுந்துார்பேட்டை தாலுகா, டி.கொளத்துார் கிராமத்தில்  மீனாட்சி சமேத தடாகபுரீஸ்வரர் நாராயண சுவாமி கோவிலில் ராமநவமி மகோற்சவ விழா நடந்தது. இதனை முன்னிட்டு, கடந்த 15ம் தேதி கணபதி ேஹாமம் மற்றும் ஆயுஷ்ய ேஹாமத்துடன் விழா துவங்கியது.  16ம் தேதி சகஸ்ரநாம அர்ச்சனை, 17 ம் தேதி கோ பூஜை மற்றும் வசோர்த்தாரை ேஹாமம் நடந்தது. 18 ம் தேதி அதிஷ்டான அபிஷேகமும், 21ம் தேதி உஞ்சவ்விருத்தி மற்றும் சீதா கல்யாணமும் நடந்தது. நேற்று முன்தினம் 13 கோடி ராமநாம தர்சன பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று, ராமர் பட்டாபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் விடையாத்தியுடன் மகோற்சவ நிறைவடைந்தது. 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை தினசரி சகஸ்கர நாம அர்ச்சனையும், அன்னதானமும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை மீனாட்சி சமேத தடாகபுரீஸ்வர லட்சுமி நாராயண சத்சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !