சின்னசேலத்தில் பால் அபிஷேகம்
ADDED :3503 days ago
சின்னசேலம்: சின்னசேலம் விஜயபுரம் வேதவள்ளி மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. சின்னசேலம் விஜயபுரம் வேதவள்ளி மாரியம்மனுக்கு சித்திரா பவுர்ணமி விழாவையொட்டி, பால்குட ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் பால்குடம் ஏந்தி விஜயபுரம், மூங்கில்பாடி ரோடு, பஸ் நிலையம், மெயின்ரோடு வழியாக ஊர்வலமாக சென்று, கோவிலை அடைந்தனர். அங்கு. அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. பின்,அன்னதானம் வழங்கினர்.