சிந்தை மகிழும் சிவதரிசனம்!
மன்னர்குடி அருகில் உள்ள திருராமேஸ்வரம் என்ற தலத்தில் ராமபிரான் பூஜித்த ராமலிங்கத்தையும், சீதை பூஜித்த சீதேஸ்வரரையும் தரிசனம் செய்யலாம். திருவானைக்காவலில் ஸ்ரீராமர் தீர்த்தம் அமைத்து நிறுவிய சிவலிங்கம் விஷ்ணுவேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சயனக் கோலத்தில் இருக்கும் கோவிந்தராஜரை அருகில் சன்னிதி கொண்டிருக்கும் சிவலிங்க மூர்த்தியைப் பூஜை செய்யும் நிலையில் தரிசனம் செய்யலாம். காஞ்சிபுரம் அருகேயுள்ள தாமல் எனும் கிராமத்தில் வராகமூர்த்தி பூஜித்த சிவன் வராகேஸ்வரர் எனும் பெயரிலும், நரசிம்மர் வழிபட்ட ஈசன் நரசிம்மேஸ்வரர் எனும் பெயரிலும் அருள்புரிகின்றனர். சூரியனார் கோயிலில் சிவராத்திரியன்று சூரிய பகவானுக்கு நான்கு காலமும் அபிஷேகமும் பூஜைகளும் நடைபெறுகின்றன. காஞ்சிபுரத்தில் திருமால் மீனாக மாறி சிவபெருமானை பூஜை செய்ததால், ஈசனுக்கு மச்சேஸ்வரர் என்று பெயர். காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சிவனை திருமால் ஆமை வடிவில் வழிபட்டதால், அப்பெயர் வந்தது.