சோழவந்தான் பத்ரகாளியம்மன் பொங்கல் விழா
ADDED :3654 days ago
சோழவந்தான்: சோழவந்தான் நாடார் புதுத்தெரு பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் திருவிழா 12 நாட்களுக்கு நடந்தது. கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டனர். அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று மாவிளக்கு ஏற்றினர். ஏப்., 17 ல் வைகை ஆற்றில் இருந்து தீர்த்தக்குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக வர, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. அம்மனுக்கு பூச்சொரிதல், தீபாராதனைகள் நடந்தன. ஏப்., 19 ல் சக்திகரகம் எடுத்து, பொங்கல் வைக்கப்பட்டது. ஏப்., 20 ல் அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் முருகேசன், ஜவஹர், சண்முகராஜா, அண்ணாமுருகன், குணசேகரன் செய்திருந்தனர்.