ஆலு விளக்கு!
ADDED :3849 days ago
வைக்கம் மகாதேவர் கோயிலில் மூலவருக்குப் பின்புறம் ஒரு சிறிய கதவு எப்போதும் அடைக்கப்பட்டிருக்கும். அங்கே பார்வதி தேவி இருப்பதாக நம்பப்படுகிறது. எதிரே ஒரு ஆலு விளக்கு. இவ்விளக்கில் எண்ணெய் ஊற்றும் குழிகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இவ்விளக்கில் ஒருவரே எண்ணெய் ஊற்றி வழிபடுவது பிரத்யேக வழிபாடாகும். பார்வதியே விளக்கு வடிவில் தரிசனம் தருவதாக ஐதீகம்.