அரோரா வேங்கடேஸ்வர ஸ்வாமி கோயில்
ADDED :3849 days ago
இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள அரோரா நகரில் அமைந்துள்ளது. வேங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில். இக்கோயில், இந்துமத ஆர்வலர்களால் 1986ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்திய பாணியிலான புராதனமான கட்டடக் கலையும் அமெரிக்காவின் நவீனத்துவமும் இணைந்து திகழும் இந்த கோயில், அமெரிக்காவில் உள்ள இந்துக் கோயில்கள் பலவற்றுக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறது. ஸ்ரீதேவி பூதேவி சமேத வேங்கடேஸ்வர ஸ்வாமி மட்டுமின்றி, கன்யாபரமேஸ்வரி, கருடாழ்வார், ஸித்தி விநாயகர், லட்சுமி வராஹர், ஐயப்பன், தேவியருடன் முருகப்பெருமான், சிவபார்வதிதேவி மற்றும் நவகிரகங்களையும் இங்கே தரிசிக்க முடிகிறது.