வேலாயுதத்தில் மூன்று அடுக்குகள்!
ADDED :3849 days ago
முருகனின் வேலாயுதத்தில் மூன்று அடுக்குகள்; இச்சா, ஞான, கிரியா சக்திகளாகவும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களாகவும் ரிக், யஜுர், ஸாமம் என்ற மூன்று வேதங்களாகவும், ஜீவ, ஈச்வர, பிரம்மம் என்ற மூன்று தத்துவங்களாகவும், கார்கபத்தியம், தட்சிணாக்கினி, ஆகவனீயம் என்று மூன்று அக்னிகளாகவும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்ற முப்பெருந்தெய்வங்களாகவும் விளங்குகின்றன.