நாஷ்வில் கணேசா திருக்கோயில்!
ADDED :3849 days ago
டென்னிஸி மாகாணத்தில், நாஷ்வில் நகரத்தில் அமைந்துள்ளது இந்த கோயில். இந்தப் பகுதியில் வசிக்கும் பக்தர்களால் 1982ம் ஆண்டு விநாயக சதுர்த்தி திருநாளில் திருப்பணி துவங்கப்பட்டு, 1984ல் கட்டிமுடிக்கப்பட்ட கோயில். இது தரையில் இருந்து சுமார் 48 அடி உயரத்துடன், 5 நிலைகளுடன் திகழும் இந்தக் கோயிலின் கோபுரம் சோழர் கால கட்டடக் கலையுடன் திகழ்கிறது. மூலவரான விநாயகரே இங்குள்ள இந்துக்களுக்கு எல்லாமுமாகத் திகழ்கிறார்.