உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னுார் சிவபெருமான் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

குன்னுார் சிவபெருமான் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

குன்னுார் : கேத்தி மந்தாடா சிவபெருமான் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஊட்டி அருகே, கேத்தி மந்தாடா பகுதியில் உள்ள, சிவன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. அதில், விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, யந்திர பிரதிஷ்டை, லிங்க பிம்பம் பிரதிஷ்டை நடந்தன. லிங்கேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், கலசஸ்தா பனம், தியான ஆராதனை, இரண்டாம் கால பூஜை, கும்பாபிஷேகம், ஆகி யவை நடந்தன. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ரேவதி அசோக்குமார் குழுவினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !