உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் இலவச திருமணம் இணையதளத்தில் முன்பதிவு

திருமலையில் இலவச திருமணம் இணையதளத்தில் முன்பதிவு

திருப்பதி: திருமலையில், திருமணம் செய்து கொள்ள விரும்புவோர், திருமலைக்கு நேரில் வந்து, தேவஸ்தான கல்யாண மண்டபத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். மே, 9 முதல், இணையதளத்தில் திருமண முன்பதிவு செய்யும் வசதியை, தேவஸ்தானம் அறிமுகம் செய்கிறது. திருமணத்திற்கான, 860 ரூபாய் கட்டணம் ரத்து செய்யப்பட்டு, ஏப்., 25 முதல், இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. புதுமண தம்பதியருக்கு, சிறப்பு தரிசனம் உள்ளிட்ட வசதிகளையும் தேவஸ்தானம் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !