நடன பாதேஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி!
ADDED :3814 days ago
நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நடன பாதேஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி படுவதைக் காண ஏராளமன பக்தர்கள் கூடினர். நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரத்தில் பழமையான ஹஸ்த தாளாம்பிகை சமேத நடன பாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம்16, 17, 18 தேதிகளில் மாலை 6:00 மணிக்கு சூரிய கதிர்கள் நேராக மூலவர் நடன பாதேஸ்வரர் மீது விழுந்து வணங்குவது போல் கட்டட அமைப்பு உள்ளது. இந்த ஆண்டு சித்திரை மாதம் 16ம் தேதியான நேற்று மாலை 6:00 மணிக்கு நடன பாதேஸ்வரர் மீது சூரியகதிர்கள் நேரடியாக விழுந்தது. இந்த அரிய காட்சியைக் காண ஏராளமான பக்தர்கள் கோவிலில் கூடினர்.