கூடாரச் செல்லியம்மன் கோவில் பூக்குழி விழா
ADDED :3653 days ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம் கழனிக்குடி கூடாரச் செல்லியம்மன் கோவில் விழா கடந்த ஏப்., 22ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை பக்தர்கள் நவபாஷாண கடற்கரையில் புனித நீராடி கோவில் முன்பு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். கோயில் முன்பு பூக்குழி இறங்கி நேர்த்திகடன் நிறைவு செய்தனர்.