உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒன்று முதல் பத்துவரை ராமர்!

ஒன்று முதல் பத்துவரை ராமர்!

ராமருக்கும் ஒன்று முதல் பத்து வரையான எண்களுக்கும் தொடர்பு உள்ளது.

1. ஏக (1) பத்தினி விரதன்.
2. இரண்டு மகன்களுக்கு (லவன், குசன்) தந்தை.
3. மூன்று அன்னையரான கவுசல்யா, சுமித்திரை, கைகேயியின் மடிகளில் வளர்ந்தவன்.
4. தசரதனின் நான்கு புதல்வர்களுள் ஒருவன்.
5. ஐம்புலன் அடக்கமுள்ள சீதாதேவியின் துணைவன்; மற்றும் குகனைத் தன் ஐந்தாவது சகோதரனாக ஏற்றவன்.
6. ஆறெழுத்தான ஸ்ரீராமஜெயம் ஆருயிர்களின் வாழ்க்கைக்கு ஊட்ட மருந்தாக இருக்கிறது.
7. ஏழு காண்டங்களான பால, அயோத்யா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த, உத்தர காண்டங்கள் அவரோடு தொடர்புடையவை.
8. எட்டெழுத்து எழிலான சுந்தரகாண்டம் நாயகன், ஆஞ்சநேயரின் தோழன்.
9. நவமி (9) திதியில் சூர்ய குலத்தில் மனிதனாக அவதரித்தவன்.
10. பத்துத் தலை அரக்கனான ராவணனை அழித்தவன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !