நடுநாட்டு காளஹஸ்தி!
ADDED :3843 days ago
விழுப்புரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது பூவரசங்குப்பம். இங்குள்ள சிவலோக நாயகி சமேத நாகநாதர் சுவாமி கோயிலில் ராகுபகவான் தனிச் சன்னதியில் தன் தேவியருடன் கிழக்கு நோக்கி அருள்கிறார். கேது பகவானும், இவர்களுக்குக் காவலாக எட்டு நாகங்களும் உள்ளனர். நடுநாட்டு காளஹஸ்தி என்று போற்றப்படும் இத்தலத்தில் மூலவருக்கு ஒவ்வொரு தமிழ்மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகளும், ராகு - கேது கிரகங்களுக்கு சர்ப்ப சாந்தி ஹோமங்களும் நடைபெறுகின்றன.