உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறப்பால் ஏற்படும் தீட்டைக் கடைப்பிடிக்கும் காலங்களில், காயத்ரி ஜபம் சகஸ்ரநாம செய்யலாமா?

இறப்பால் ஏற்படும் தீட்டைக் கடைப்பிடிக்கும் காலங்களில், காயத்ரி ஜபம் சகஸ்ரநாம செய்யலாமா?

மனதின் அடித்தளத்தில் ஒளிந்துகொண்டிருக்கும் செய்யக்கூடாது என்கிற எண்ணமே செய்யலாமா? என்ற கேள்வியை எழுப்புகிறது. நீங்கள் குறிப்பிடும் நாட்களில் ஜபம் மற்றும் பாராயணம் போன்றவற்றைக் கடைப்பிடிக்காமல் இருந்தாலும், கடைப்பிடித்ததற்கான பலன் கிடைத்துவிடும். பக்தி சிரத்தையோடு இந்த நாட்களில் கடைப்பிடித்தால், மற்ற நாட்களில் செய்த ஜப பாராயண பலன்களும் இழக்கப்பட்டுவிடும் ! திருமண வரவேற்பு, வெளியூர் பயணங்கள்... போன்ற சந்தர்ப்பங்களில் ஜப-பாராயணம் கழன்றுகொள்ளும்; அப்போது மன நெருடல் முளைக்காது. ஆகாத வேளையில் ஆற அமர, பக்தி சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழக்கூடாது. காயத்ரி ஜபம் நித்ய கர்மா, அதைச் செய்தே ஆகவேண்டும். எந்தவொரு காலத்திலும் செய்யலாம்; அதற்கு விதிவிலக்கு உண்டு. நீங்கள் குறிப்பிடும் நாட்களில், சஹஸ்ரநாம பாராயணத்தைத் தள்ளிப்போடலாம்; தவறில்லை. தீட்டு மனதைத் தீண்டியிருப்பதால், அந்தக் காலங்களில் நித்ய கர்மாவான காயத்ரி ஜபத்தை தவிர, மற்றவற்றுக்குத் தகுதி போதாது. தீட்டு விலகி, மனமும் தீட்டிலிருந்து விடுபட்ட பிறகு, பாராயணத்தை மேற்கொள்ளலாம். தினமும் உணவு அருந்துவோம். தீட்டு காலங்களிலும் உணவை தவிர்ப்பது இல்லை. அதுபோன்றே காயத்ரி ஜபத்தையும் தினமும் ஜபிக்க வேண்டும். பாராயணங்களைத் தவிர்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !