உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தவுட்டுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் தீ மிதித்து நேர்த்திக்கடன்

தவுட்டுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் தீ மிதித்து நேர்த்திக்கடன்

நொய்யல்: கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு நேற்றுமுன்தினம் நள்ளிரவு பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக, தவுட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் நேற்று முன்தினம் காலை காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடியபின் தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். அதன் பின் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தின் மாலை, மீண்டும் காவிரி ஆற்றுக்குச் சென்று நீராடி விட்டு தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக வந்தனர். இரவு, 7 மணியளவில் பக்தர்கள் பூக்குழியில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பொங்கல் வைத்து பெண்கள் வழிபட்டனர். மாவிளக்கு பூஜையிலும் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !