உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி ஜாத்திரை விழா: கங்கையம்மன் வீதியுலா

திருத்தணி ஜாத்திரை விழா: கங்கையம்மன் வீதியுலா

திருத்தணி: ஊராட்சியில் நடந்த ஜாத்திரை விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை ஊராட்சிக்குட்பட்ட கல்கி நகரில் கங்கையம்மன் ஜாத்திரை விழா நேற்று நடந்தது. விழாவை ஓட்டி, கங்கையம்மன் கோவில் வளாகத்தில், காலையில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பூ கரகம் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தது. மாலையில் திரளான பெண்கள் அம்மன் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு 7:30 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பூ கரகத்துடன் அம்மன் கல்கி நகர் முழுவதும் வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு நாடகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !