அசரீரியாக இறைவன்!
ADDED :3451 days ago
திருமுருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகத் திகழ்வது திருவேரகம் என்னும் சுவாமிமலை. ஒரு சமயம் வள்ளி மலை சுவாமிகள், திருப்புகழ் தந்த அருணகிரிநாத சுவாமிகள் முக்தி பெற்ற நாள் எது என்பதைத் தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் சுவாமிமலை இறைவன் சன்னிதிக்கு வந்து, அருணாகிரிநாத சுவாமிகள் முக்தி பெற்ற நாள் எது? என்று சுவாமிநாத சுவாமியை வேண்ட கார்த்திகை மாதம் மூல நட்சத்திரம் என்று அசரீரியாக இறைவன் பதிலளித்தார்.