பழநியில் பாதி!
ADDED :3451 days ago
கேரள மாநிலத்தில், பாலக்காட்டிலிருந்து 5 கி.மீ. தொலைவில் கொடும்பு என்ற திருத்தலம் உள்ளது. இங்குள்ள இறைவன் கல்யாண சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார். கேரள மக்கள் பழநியில் பாதி கொடும்பு என்று போற்றுகின்ற அளவிற்கு கொடும்புக் கோயில் சிறப்புப் பெற்றுள்ளது. இக்கோயில் தமிழ்நாட்டு மரபுப்படியே அமைக்கப்பட்டு, வழிபாடும் தமிழ் முறைப்படியே நடத்தப்படுகிறது. இக்கொடும்புத் தலத்திற்கென்றே பிரத்யேகமான விழா ஒன்றும் உண்டு. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கும்பகோணத்தில் மகாமத் திருவிழா நடைபெறுகின்ற போது கொடும்பிலும் திருவிழா நடைபெறுகிறது.