குன்னுார் தந்திமாரியம்மன் கோவிலில் ஹெத்தையம்மன் திருவீதி உலா
ADDED :3450 days ago
குன்னுார்: குன்னுார் தந்திமாரியம்மன் கோவிலில், ஹெத்தையம்மன் அலங்காரத்தில்,அம்மன் நகர் வலம் வந்தார். குன்னுார் தந்திமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நேற்று படுக மக்களின் பாரம்பரிய நிகழ்ச்சியுடன், அம்மன் ஊர்வலம் நடந்தது. முன்னதாக, சுப்ரமணிய சுவாமி கோவில் வரை ஹெத்தையம்மன் நகர்வலம் வந்தார். பிறகு அங்கிருந்து படுக மக்களின் கலாசார ஆடல்பாடல்களுடன், பால்குட ஊர்வலம் மற்றும் அம்மன் ஊர்வலம், மவுன்ட் ரோடு வழியாக தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தது. விநாயகர் கோவில் மண்டபத்தில் அன்னதானம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.