உத்திராபதியார் கோவிலில் நாளை அன்னப்படையல்
ADDED :3456 days ago
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை உத்திராபதியார் கோவிலில் அன்னப்படையல் விழா நாளை (6ம் தேதி) நடக்கிறது. நேற்று (4ம் தேதி) கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. சிறப்பு விழாவான அன்னப்படையல் நாளை (6ம் தேதி) நடக்கிறது. அதனையொட்டி அன்று காலை 10:00 மணிக்கு அலங்கார காவடியுடன், உத்திராபதியார் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு சீராளன் கறி சமைத்து, 6:00 மணிக்கு அன்னப்படையல் திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்கின்றனர்.