உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழா

உடுமலை உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழா

உடுமலை: கிருஷ்ணாபுரம் உச்சிமாகாளியம்மன் கோவில் உற்சவத்திருவிழா, நாளை நிறைவு பெறுகிறது. மடத்துக்குளம், கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ளது, உச்சிமாகாளியம்மன் கோவில். கோவில் உற்சவத்திருவிழா, ஏப்., 19ல் நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம், கணபதி ேஹாமமும், அமராவதி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடந்தன. நேற்று அதிகாலை முதல், மாவிளக்கு எடுத்தல், பூவோடு எடுத்தல் உள்ளிட்டவை நடந்தன. மாலையில், அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். இன்று காலை, 8:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டுவிழாவும், இரவு, 7:00 மணிக்கு ராஜாவூர் தேவராட்டத்துக்குழுவினர் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை மாலை, 6:00 மணிக்கு, உச்சி மாகாளியம்மனுக்கு அபிேஷக ஆராதனையுடன் உற்சவ திருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !