உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரத்தில் பிரதோஷ விழா

கண்டாச்சிபுரத்தில் பிரதோஷ விழா

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை நடந்தது. கண்டாச்சிபுரம் ராமாநாதீஸ்வரர் கோவிலில், பிரதோஷ விழாவையொட்டி, நந்தித் தேவருக்கு பாலபிஷேகம் நடந்தது. முன்னதாக மூலவர் ராமநாதீஸ்வரருக்கு சந்தனக்காப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் நந்தித்தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து பிரதோஷமூர்த்தி சுவாமி, கோவிலின் உட்பிரகாரத்தை வலம் வந்தார். விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன், சிவாச்சாரியார்கள் பாலகிருஷ்ணன், வெங்கடேசன், ஓதுவார்கள் பழனியாண்டி, கிருஷ்ணமூர்த்தி, உபயதாரர் ராஜி ஆகியோர் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !