தர்ம முனீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா
ADDED :3449 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,28ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று பூத்தட்டு விழா நடந்தது. ஏராளமான பெண்கள் பூத்தட்டுடன் ஊர்வலமாக வந்து சுவாமிக்கு புஷ்பாபிஷேகம் செய்தனர்.