அந்தியூர் கொண்ணமரத்தையன் கோவில் திருவிழா
ADDED :3448 days ago
அந்தியூர்: அந்தியூர் புதுப்பாளையம் கொண்ணமரத்தையன் கோவில் திருவிழா கடந்த மாதம், 20ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நேற்று காலை, 10 மணிக்கு புதுப்பாளையம் குருநாதசாமி கோவிலிருந்து, அலங்கரிக்கப்பட்ட கொண்ணமரத்தையன் சிலை கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. வழி நெடுக சுவாமிக்கு முன் பக்தர்கள் ஆடுகளை பழிகொடுத்து வழிபட்டனர். மதியம், 12 மணிக்கு மேல், ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்தனர். விழாவில் அந்தியூர், பவானி, ஆப்பக்கூடல், கோபி, பர்கூர், அம்மாபேட்டை, ஓலகடம், வெள்ளித்திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.