உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிசங்கரர் ஜெயந்தி நாளை துவக்கம்

ஆதிசங்கரர் ஜெயந்தி நாளை துவக்கம்

பவானி: ஆதிசங்கரர் ஜெயந்தி உற்சவம், நாளை (7ம் தேதி) துவங்குகிறது. பவானியில் கூடுதுறை செல்லும் ரோட்டில் உள்ள, சிருங்கேரி சங்கர மடத்தில், ஆதி சங்கரர் ஜெயந்தி உற்சவம், நாளை (?ம் தேதி) தொடங்கி, 11ம் தேதி வரை, ஐந்து நாட்கள் தினமும் காலை, 7 மணி முதல், 9 மணி வரை வேத பாராயணத்துடன் அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலை, 6 மணி முதல், 8 மணி வரை விஷ்ணு சகஸ்ர நாமம், லலிதா சகஸ்ர நாம பாராயணம், பஜனை, கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. 11ம் தேதி காலை, 7 மணிக்கு ஆதி சங்கரர் உருவ படம் திருவீதி உலா நிகழ்ச்சி வேத பாராயணத்துடன் நடக்கிறது. ஏற்பாடுகளை மடத்தின் தர்மகர்த்தா வெங்கட்ராமன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !