உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகுலம்பலா யாகம்

பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகுலம்பலா யாகம்

உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகுலம்பலா யாகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா, பாதூரில் உள்ள அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி கோவி லில் சித்திரை மாத அமாவாசை,  நிகுலம்பலா யாகம் நடந்தது. காலை 10.30 மணிக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. யாக குண்டத்தில் பழ வகைகள், நெய் சேர்ப்பிக்கப்பட்டன. கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் முன்னிலையில்,  மோகன குருக்கள் தலைமையிலான குழுவினர், யாகத்தை நடத்தினர்.  பிரத்தியங்கராதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !