திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் அமாவாசை விழா கோலாகலம்!
ADDED :3524 days ago
உடுமலை: உடுமலை அருகே சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ள திருமூர்த்திமலை பகுதியில், கடந்த சில நாட்களாக அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். இதனால், இப்பகுதி களை கட்டத்துவங்கியுள்ளது. அமாவாசையான நேற்று இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்ததால், கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டு சென்றனர். அமாவாசை முன்னிட்டு, காலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம், அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன.