உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமபரதேசி சுவாமிகள் கோவிலில் குரு பூஜை விழா

ராமபரதேசி சுவாமிகள் கோவிலில் குரு பூஜை விழா

புதுச்சேரி: வில்லியனூர், சத்குரு ராமபரதேசி சுவாமிகள் கோவிலில், மகா குரு பூஜை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை 10:00 மணிக்கு, சத்குரு ராமபரதேசி சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது.  பகல் 12:00 மணிக்கு, மகா குரு பூஜையும், அன்னப்பிரசாதம் வினியோகமும் நடந்தது. மாலை 6:30 மணிக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தது. சத்குரு ராமபரதேசி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை, சத்குரு ராமபரதேசி சுவாமி கள் சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !