சத்ய சாய்பாபாவின் தாய் ஈஸ்வரம்மா நினைவு நாள்
கொடைக்கானல்: கொடைக்கானலில் சத்ய சாய்பாபாவின் தாய் ஈஸ்வரம்மாவின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. நட்சத்திர ஏரி அருகே உள்ள சாய் சுருதி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பலர் பங்கேற்றனர். புட்டபார்த்தி பிரசாந்தி நிலையத்தை சேர்ந்த சத்யஜித் தலைமை வகித்தார். சத்ய சாய் சேவா மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். காலை 6. 30 மணிக்கு ஓம் ஹாரம், சுப்ரபாதம் நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி துவங்கியது. சத்ய சாய்பாபா இருக்கையின் பாதத்தில் வண்ண மலர்கள் தூவி பக்தர்கள் வேண்டினர். கொடி ஏற்றம், வேத பாராயணம், பஜனை நடந்தது. பால விகாஷ் குழந்தைகள் நாட்டிய நாடகம், கலை நிகழ்ச்சிகள் மூலம் சாய்பாபா மகிமைகளை எடுத்துரைத்தனர். பின்னர் நாராயண சேவை வஸ்த்ர தானம் நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கம்பளி, சேலைகள் , குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ், எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. திருப்பூர் மாவட்ட தலைவர் சுப்ரமணியம், டிரஸ்ட் கன்வீனர் மோகன், மாநில செயலாளர் வரதன் பங்கேற்றனர்.