பாலதண்டாயுதபாணி கோயில் விசாக திருவிழா துவக்கம்
ADDED :3445 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே தர்மராஜன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோயில் வைகாசி விசாகத்திருவிழா இன்று(மே 7) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி, சுவாமிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. மூன்று நாட்கள் நடக்கும் விழாவில் பால்குடம், பூக்குழி, சுவாமிக்கு பாலாபிஷேகம், இரண்டாம் நாள் பட்டு பல்லக்கு, மூன்றாம் நாள் பூப்பல்லக்கில் சுவாமி வீதிஉலா நடக்கும்.