உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தர் வேடமிட்டவர் வாக்கு பலித்து மழை பெய்தது

சித்தர் வேடமிட்டவர் வாக்கு பலித்து மழை பெய்தது

மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி அருகே, மழை பெய்ததால், சித்தர் வேடமிட்டவர் வாக்கு பலித்ததாக, பகுதிவாசிகள் கூறினர். இளம்பிள்ளை அருகே, கஞ்சமலை சித்தர்கோவிலில், 4ம் தேதி, சித்தர் திருவிளையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதில், சித்தர் வேடமிட்டவர், 7 நாட்களுக்குள் மழை பெய்யும் என கூறினார். அதன்படி, அவர் வாக்கு கூறிய, 3ம் நாளான நேற்று இரவு, சித்தர் கோவிலின் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், சித்தர் வேடமிட்டவர் கூறிய வாக்கு பலித்துள்ளதாக பகுதிவாசிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !