மாறிப்போகும் திட்டங்கள்!
இயேசுவின் மீது விசுவாசம் கொண்ட ஒரு பெரியவர் தன் மகனை மருத்துவக் கல்லுõரியில் சேர்க்க திட்டமிட்டார். மகன் லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் எளன ஆசைப்பட்டார். ஆனால், அந்த மாணவனுக்கு மருத்துவக்கல்லுõரியில் இடம் கிடைக்கவில்லை. நொந்து போன பெரியவர், வேறு வழியின்றி மகனை மற்றொரு கல்லுõரியில் சேர்த்துவிட்டார். நன்கு படித்த அந்த மாணவன், சி.ஏ. படித்து ஆடிட்டராகி விட்டான். இப்போது அவன் பல மருத்துவமனைகளுக்கு ஆடிட்டராக இருக்கிறான். பல பெரிய தொழில் நிறுவனங்கள் அவனைத் தேடி வருகின்றன. இப்போது பெரியவர் கர்த்தரிடம் ஜெபித்தார்.“கர்த்தரே! நான் ஒன்று நினைக்க நீர் வேறு மாதிரியாக முடிவு செய்திருக்கிறீர். இவன் மருத்துவராகி இருந்தால், இரவும், பகலும் சிரமப்பட்டிருந்தாலும் கூட இவ்வளவு பணம் சம்பாதித்திருக்க முடியாது. இவனோ பகலில் மட்டும் ஏசி அறையில் உழைக்கிறான். லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறான். எல்லாம் உம் கருணையினாலும், நான் உம் மீது கொண்ட விசுவாசத்தாலும் வந்தது,” என்றார்.“மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம். ஆனாலும், கர்த்தருடைய யோசனையே நிலை நிற்கும்,” என்கிறது பைபிள்.