தேர்தலில் நிற்கிறீர்களா? வெற்றிக்கு இவரைப் பிடியுங்க!
திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூரில் உக்ர நரசிம்மர் பதினாறு கைகளுடன் கோவில் கொண்டிருக்கிறார். காஷ்யப மகரிஷி, வருணன், சுகோஷமுனிவர் ஆகியோர் திருமாலின் நரசிம்ம அவதார கோலத்தை தரிசிக்க வேண்டி தவம் செய்தனர். இதன் பயனாக விஷ்ணு இந்த தலத்தில் உக்கிர நரசிம்மராக காட்சியளித்தார். இவருக்கு முனை எதிர் மோகர் விண்ணகர்’ என்ற சிறப்புப் பெயருண்டு. இதற்கு போரில் எதிரிகளை வெல்வதில் விருப்பம் கொண்டவர்’ என்று பொருள். இவரை வழிபட்டவருக்கு ராஜ பதவி தேடி வரும் என்பது ஐதீகம். அரசியல்வாதிகள் இந்தக் கோவிலுக்கு வந்து தங்கள் வெற்றிக்காக வேண்டிச் செல்கின்றனர். இங்கு மே19ல் வருஷாபிஷேகம், மே20ல் நரசிம்ம ஜெயந்தி விழா நடக்கிறது. இதனையொட்டி, மாலை 3.00 மணிக்கு 16 வகை மூலிகையால் நரசிம்ம மூல மந்திர ஹோமம், விஷ்ணு சூக்த ஹோமம், மகாலட்சுமி சூக்த ஹோமம், மன்யு சூக்த ஹோமம் நடக்கிறது. இதன் பின் பெருமாள் அலங்கார கோலத்தில் சப்பரத்தில் இங்குள்ள குளத்தை வலம் வரும் வைபவம் நடக்கும்.
அலைபேசி: 94423 30643.