கொப்புடையம்மன் கோயில் விழா; நாளை தொடக்கம்
ADDED :3443 days ago
காரைக்குடி: காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் செவ்வாய் திருவிழா நாளை தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு மேல் காப்பு கட்டுதலும், இரவு 9 மணிக்கு வெள்ளி சிம்ம வாகனத்தின் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. வரும் 17-ம் தேதி காலை 10.45 மணிக்கு மேல், 11.30 மணிக்குள் அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி,மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 18-ம் தேதி காலை 9 மணிக்கு காட்டம்மன் கோயிலிலிருந்து தேர் கொப்புடையம்மன் கோயிலுக்கு திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது. 19-ம் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம்,இரவு 11 மணிக்கு தெப்பத்தில் அம்பாள் உலா நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை வெள்ளி கேடயத்தில் அம்பாள் புறப்பாடும்,இரவு 9 மணிக்கு வீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் செல்வி செய்து வருகின்றனர்.