புனித சகாய அன்னை சர்ச் தேர்ப்பவனி விழா
ADDED :3444 days ago
ராமநாதபுரம்: மண்டபம் முகாம் புனித சகாய அன்னை சர்ச் தேர்ப்பவனி விழா ஏப்., 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலை நவநாள் திருப்பலி, மறையுரை சிந்தனை நடந்தது. மே 7 மாலை 6.30 மணிக்கு சிறப்பு திருப்பலியுடன் தேர்ப்பவனி துவங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சகாய அன்னை மின்னொளி ரதத்தில் பவனி வந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு திருப்பலி, 7.30 மணிக்கு விழா நிறைவு கூட்டு திருப்பலி நடந்தது. சிறுவர்களுக்கு புது நன்மை வழங்கப்பட்டது. ராமநாதபுரம், முத்துப்பேட்டை, கீழக்கரை, மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், டி.சூசையப்பர்பட்டினம், ராமேஸ்வரம், ஓலைக்குடா, அரியாண்குண்டு, தென்குடா, தேவிபட்டினம் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சர்ச் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்தனர்.