உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொரட்டாண்டி கோவிலில் கல்யாணசுந்தரருக்கு திருக்கல்யாணம்

மொரட்டாண்டி கோவிலில் கல்யாணசுந்தரருக்கு திருக்கல்யாணம்

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், அட்சய திருதியையை முன்னிட்டு கோகிலாம்பிகை உடனுறை கல்யாணசுந்தரருக்கு திரு க்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. காலை 9.௦௦ மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நவக்கிர ஆராதனை, ஹோமம், லலிதா சகஸ்ரநாம பாராயணம்,  கனகதாரா தோத்திர பாராயணம் நடந்தது. அதனை தொடர்ந்து, மகா கணபதி, கோகிலாம் பிகை உடனுறை கல்யாணசுந்தரர், தேவசேனா உடனுறை  சுப்ரமணியர், நீலாம்பிகை உடனுறை சனீஸ்வர பகவான் ஆகிய சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை, சிதம்பர குருக்கள்,  கீதா சங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !