பிராண நாதேஸ்வரர் கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா
திருக்கனுார்: பி.எஸ்.பாளையம் பிராண நாதேஸ்வரர் கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா நேற்று நடந்தது. திருக்கனுார் அடுத்த பி.எஸ்.பாளையம் ஏரிக்கரையில் கடந்த மார்ச் 21ம் தேதி புதர்கள் மத்தியில் மறைந்த நிலையில் இருந்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான மங்கலாம்பிகை உடனுறை பிராண நாதேஸ்வரர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, சிலை இருந்த இடத்தில் கோவில் கட்டுவற்தாக, சிலையை அப்பகுதி மக்கள் ஏரிக்கரை மீது மேடான பகுதியில் வைத்து பிரதிஷ்டை செய்தனர். மண்டலாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில், மண்டலாபிஷேக 48 வது நாள் நிறைவு விழா நேற்று நடந்தது. இதனையொட்டி, காலை 10:00 மணிக்கு நாதேஸ்வரர் சுவாமிக்கு பாலா பிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, 12:00 மணிக்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில், பி.எஸ்.பாளையம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கூனிச்சம்பட்டு கலியபெருமாள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.