உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொழுநோயை அகற்றுபவர்களுக்கான சுவாமி அகண்டானந்தர் சேவா விருது!

தொழுநோயை அகற்றுபவர்களுக்கான சுவாமி அகண்டானந்தர் சேவா விருது!

சென்னை: கடந்த 28 ஆண்டுகளாக தொழுநோயிலிருந்து மீண்ட சுமார் 1,350 மாற்றுத் திறனாளிகளுக்குப் பொருளாதார மற்றும் மருத்துவ அடிப்படையில் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சேவையாற்றி வருகிறது. இப்பணியானது இந்த மக்கள் தங்கள் வீட்டிலும் சமுதாயத்திலும் கவுரவமான வாழ்க்கை வாழ வகை செய்து வருகிறது. சென்னை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் ஆற்றிவரும் தொழுநோய் நிவாரண மற்றும் மறுவாழ்வுப் பணிகளை தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் சேவை வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் சுவாமி அகண்டானந்தர் பெயரில் ஒரு விருது வழங்க உள்ளனர். தொழுநோய்த் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய அல்லது தற்போது பணிபுரிந்து வரும் அரசு அலுவலர்கள், சமூகநல ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் தகுந்த அத்தாட்சிகளுடன் விண்ணபிக்கவும்.

முகவரி: மேலாளர், ஸ்ரீராமகிருஷ்ண மடம்,
மயிலாப்பூர்,
சென்னை-4.

தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்/ நிறுவனத்திற்கு ரூ.25,000/- ரொக்கமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். விண்ணப்பித்த தகுதியான அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: மே, 31-2016
மேலும் விபரங்களுக்கு: 90031 05998

கடவுள் தொண்டில்,
சுவாமி விமூர்த்தானந்தர்,
மேலாளர், ஸ்ரீராமகிருஷ்ணடம்,
சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !