காரைக்கால் கந்தூரி விழாவிற்கு இரதம்,பல்லக்கு செய்யும் பணி தீவிரம்!
காரைக்கால்: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் கந்தூரி விழாயொட்டி இரதம்,பல்லக்கு பணிகள் நடைபெற்று வருகிறது. காரைக்கால் பிரசித்தி பெற்ற விழாவான மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் 193ம் ஆண்டு கந்தூரி விழா வரும் 17ம் தேதி துவக்குகிறது. அன்று மாலை ரதம்,பல்லக்கு வீதி உலாவும்.இரவு 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.மே.26ம் தேதி இரவு 10 மணிக்கு ஹலபு என்னும் போர்வை வீதி உலா,இரவு 11.30 மணிக்கு மின்சார சந்தனக்கூடு புறப்படுதல்.அதிகாலை 3மணிக்கு வலியுல்லாஹ் அவர்கள் ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசுதல் மே.29ம் தேதி கொடி இறக்கம் நடக்கிறது. மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் பல்லாக்கு கடந்த 150 ஆண்டுகளுக்கு முன் புதிதாக செய்யப்பட்டது. எந்த மாவட்டத்தில் இல்லாத சிறப்பு மிகுந்த அம்சங்களுடன் இரதம்,பல்லக்கு வேலைப்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் இரதம்,பல்லக்கு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.