மகாமாரியம்மன் கோவில் கரக உற்சவ விழா
ADDED :3440 days ago
குன்னுார்: குன்னுார் வெலிங்டன் கூர்காஹில் பகுதியில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில், 38வது ஆண்டு கரக உற்சவ விழா நடந்தது. இதற்காக, வெலிங்டன் பேரக்ஸ் கூர்காகேம்ப் பகுதியில் உள்ள அங்காள ஈஸ்வரியம்மன் கோவிலில் இருந்து, கரக ஊர்வலம் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அபிஷே கம், அலங்காரம், உச்சி பூஜை, கஞ்சிவார்த்தல், அன்னதானம் ஆகியவை நடந்தன. நேற்று மஞ்சள் நீராடலுடன் விழா நிறைவு பெற்றது.