உள்ளூர் செய்திகள்

லிங்க வகைகள்

லிங்க வகைகள் ஏழு வகைப்படும். அவைகளாவன:
* பார்த்தலிங்கம்: சிவபெருமான் மகாசங்கார காலம் வரை சாந்நித்யராய் இருந்து ஆன்மாக்களுக்கு அருள்புரியும் லிங்கமாகும். இது தாவரலிங்கம், திரலிங்கம் எனவும் பெயர் பெறும்.
* சுயம்புலிங்கம்: எவராலும் தோற்றுவிக்கப் பெறாமல் இயற்கையாக தாமே தோன்றிய லிங்கங்கள் சுயம்புலிங்கம் எனவும் தான் தோன்றி லிங்கம் எனவும் பெயர்பெறும்.
*காணலிங்கம்: கணபதி, முருகன் முதலான தேவ களங்களால் நிறுவப்பெற்று பூசனை செய்யப் பெற்றவை காணலிங்கங்கள் எனப் பெறும்.
* தெய்வீக லிங்கம்: பிரம்மன், விஷ்ணு முலான தேவர்களால் நிறுவப்பெற்று பூஜிக்கப்பட்ட லிங்கங்கள் தைவிக லிங்கம் ஆகும்.
* ஆரியலிங்கம்: முனிவர்கள், அசுரர்களால் நிறுவப்பெற்று பூஜனை செய்யும் லிங்கம் ஆரிடலிங்கமாகும்.
* மானிடலிங்கம்: மனிதர்களால் உருவாக்கப்பெற்று பூஜனை பெறுவத மானிட லிங்கமாகும்.
* சனிகலிங்கம்: நிறுவப்பெற்று, பூஜனை செய்தவுடன் விடப்படுபவைகள் சணிகலிங்கம் எனப்படும். மண், அரிசி, அன்னம், ஆற்றுமணல், கோமியம், வெண்ணெய் உத்திராக்கம், சந்தனம், கூர்ச்சம், புஷ்பம், சர்க்கரை, மா போன்ற பொருட்களால் செய்யப்பெறுபவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !