உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு

மாரியம்மன் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பு

வெள்ளியணை: வெள்ளியணை மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தாந்தோன்றி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட வெள்ளியணையில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சித்திரைத் திருவிழா முன்னிட்டு ஆண்டுதோறும் திருவிழா நடப்பது வழக்கம். உற்சவ திருவிழா முன்னிட்டு கம்பம் நடுதலுடன் விழா துவங்கியது. ஒவ்வொரு நாளும் குதிரை வாகனம், சிம்ம வாகனம், அன்னவாகனத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வீதியுலாவுக்கு பின் தேரோட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !