உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா

பரமக்குடி பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா

பரமக்குடி: எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் மே 10 காலை 11 மணிக்கு வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு பெருமாள் அன்ன வாகனத்தில் வீதிவலம் வந்தார். தொடர்ந்து பல்லக்கு, சிம்ம, சேஷ, கருட, அனுமன், யானை உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் காலை, மாலை வீதிவலம் வருகிறார்.

முக்கிய நிகழ்வான ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் திருக்கல்யாணம் மே 16 ல் காலை 9 மணிக்கு நடக்கிறது. அன்று இரவு புஷ்பபல்லக்கில் தேவியருடன் பெருமாள் வீதியுலா வருகிறார். மே 18 ம் தேதி மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 19ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !