உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாச்சூரில் வைகாசி விசாகம் இன்று துவக்கம்

திருப்பாச்சூரில் வைகாசி விசாகம் இன்று துவக்கம்

திருப்பாச்சூர்: திருப்பாச்சூரில் உள்ளது தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வர சுவாமி கோவில். இந்த கோவிலில், வைகாசி விசாக பெருவிழா, இன்று காலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

முன்னதாக, நேற்று முன்தினம் காலை, கிராம தேவதையான பாசூர் அம்மன் வழிபாடும், நேற்று காலை, சொர்ணகாளி அம்மன் உற்சவமும், மாலை விநாயகர் உற்சவமும் நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் கொடியேற்றமும், மாலை ரிஷப வாகனத்தில் வாசீஸ்வரர் வீதியுலாவும் நடைபெறும். தொடர்ந்து, 14 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருக்கல்யாணம் வரும், 17ம் தேதியும், நடராஜர் அபிஷேகம், 20ம் தேதியும், பூப்பல்லக்கு வீதியுலா, 22ம் தேதியும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !