கடலுார் வேத விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3438 days ago
கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர், வேத விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர், கடை வீதியில் உள்ள, வேத விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 8ம் தேதி, விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, வாஸ்து சாந்தி, ரக்ஷா பந்தனம், அக்னி குண்ட ஹோமம் நடந்தது. தொடர்ந்து, 9ம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜை, யாக மண்டப பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. 10ம் தேதி 4ம், 5ம் கால யாகசாலை பூஜை நடந்தது. கும்பாபிஷேக தினமான, 11ம் தேதி, 6ம் கால யாகசாலை பூஜை, யாக மண்டப பூஜை, யாத்ராதானம், கடம் புறப்பாடாகி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷே கம், தீபாராதனை நடந்தது.