ஸ்ரீவி., வைத்தியநாத சுவாமி கோயில் வைகாசி விழா துவக்கம்!
ADDED :3436 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி-சிவகாமி அம்பாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி முடிந்த பிறகு,விசேஷ அபிஷேகம், தீபாராதனைகள் செய்யபட்டு, ரகு பட்டர் தலைமையில் கொடிபட்டம் ஏற்றப்பட்டது. சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். இரவு 7மணிக்குமேல் வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி-அம்பாள் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை செயல்அலுவலர் நாராயணி தலைமையில் கோயில் அலுவலர்கள் செய்தனர். வரும் 18ல் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் மாலை ஆன்மிகசொற்பொழிவு நடக்கிறது.