உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை சித்திரை திருவிழாவில் அழகருக்கு ரூ.89 லட்சம் பக்தர்கள் காணிக்கை!

மதுரை சித்திரை திருவிழாவில் அழகருக்கு ரூ.89 லட்சம் பக்தர்கள் காணிக்கை!

அழகர்கோவில்:மதுரை சித்திரை திருவிழாவின் போது நேரில் வந்து ஆசி வழங்கிய அழகருக்கு ரூ. 89.82 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.திருவிழாவையொட்டி ஏப்., 20 முதல் 25 வரை மதுரையில் எழுந்தருளிய கள்ளழகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அழகருடன் ஏராளமான உண்டியல்கள் எடுத்து வரப்பட்டன. இவற்றில் பணம், தங்கம் போன்றவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். இந்த தற்காலிக உண்டியல்கள் மற்றும் அழகர்கோவில் கோயிலில் இருந்த நிரந்தர உண்டியல்கள் நிர்வாக அதிகாரி செல்லதுரை, உதவி அதிகாரி அனிதா முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன. ரூ.89 லட்சத்து 82,646 ரொக்கம், தங்கம் 99 கிராம் 600 மி.கி., வெள்ளி 412 கிராம் மற்றும் ஏராளமான வெளிநாட்டு கரன்சி இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !